சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஐந்து குடியிருப்பு வீடுகள் அகற்றம்
சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஐந்து குடியிருப்பு வீடுகள் அகற்றம்ஆத்துார், அக். 1-ஆத்துார் அருகே, 16 ஆண்டுகளுக்கு பின், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளுக்கு, ஐந்து குடியிருப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் செய்தனர்.ஆத்துார் வழியாக, சேலம்- உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலை செல்கிறது. 2008ல், செல்லியம்பாளையம் பஸ் ஸ்டாப் வடக்கு பகுதியில் உள்ள ஐந்து குடியிருப்பு வீடுகளை சேர்ந்தவர்கள், கூடுதல் இழப்பீடு தொகை கேட்டனர். இதனால், அந்த வீடுகள் அகற்றப்படாமல் நான்கு வழிச்சாலை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், ஓய்வு பெற்ற போலீஸ் ஜெயராமன், அவரது மனைவி ராணி பெயரில் உள்ள வீட்டிற்கு, கூடுதல் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், செல்லியம்பாளையம் வழியாக, 25 கோடி ரூபாயில், புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலம் கட்டுமான பணிகளில், அகற்றப்படாமல் உள்ள வீடுகள் இடையூறாக உள்ளது என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.ஐந்து வீடுகளின் உரிமையாளர்கள், அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை பெற்றுக் கொண்டு, 60 நாளில் வீடுகளை அகற்றிக் கொள்ளவேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். 90 நாளுக்கு மேலாகியும் அங்குள்ள ஐந்து வீடுகளும் அகற்றப்படாமல் இருந்தது.சேலம் கலெக்டர் உத்தரவுபடி, நேற்று நிலம் எடுப்பு பிரிவு தனி தாசில்தார் சுமதி, ஆத்துார் தாசில்தார் பாலாஜி ஆகியோர், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமை யில், 20க்கும் மேற்பட்ட போலீசாருடன், செல்லியம்பாளையத்தில் பாலத்திற்கு இடையூறாக உள்ள வீடுகளை அகற்றும் பணிக்கு சென்றனர்.அப்போது, ஓய்வு பெற்ற போலீஸ் ஜெயராமன், அகற்றும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். வருவாய்த்துறையினர், போலீசார், 'இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளுங்கள். பாலம் பணிகள் மேற்கொள்வதற்கு இடையூறாக வீடுகள் உள்ளது. 16 ஆண்டுகளாக, சாலை விரிவாக்க பணிகள், இவ்விடத்தில் மேற்கொள்ள முடியவில்லை' என்றனர்.பேச்சுவார்த்தைக்கு பின், ஓய்வு பெற்ற போலீசார், மற்ற நபர்களும் கலைந்து சென்றனர். அதன்பின், மூன்று 'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன், ஐந்து குடியிருப்பு வீடுகளின் கட்டடங்களை அகற்றும் பணிகள் மேற்கொண்டனர்.