தேர் திருவிழாவை முன்னிட்டு தகர கொட்டகை அகற்றம்
சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த, 12ல் முகூர்த்தக்கம்பம் நடுதலுடன் தொடங்கியது.ஜூன், 1ல் கொடியேற்றம், 5ல் திருக்கல்யாணம், 9ல் தேரோட்டம் நடக்க உள்ளது. அதேபோல் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ தேர் திருவிழா கடந்த, 12ல் நடந்தது. ஜூன், 1ல் பிரமோற்சவ விழா தொடங்கி, 2ல் கொடியேற்றம், 10ல் தேரோட்டம் நடக்க உள்ளது.ஜூன், 9, 10ல், சேலத்தில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களின் தேரோட்டம் நடக்க உள்ளதை முன்னிட்டு, தேர் வீதியில் உள்ள ராஜகணபதி கோவில் முன் நிறுத்தப்பட்டுள்ள இரு தேர்களின் தகர கொட்டகை அகற்றப்பட்டது.மராமத்து வேலை இருந்தால் அதை சரி செய்து சுத்தப்படுத்தி, சாரங்கள் கட்டி அலங்கரித்து, இரும்பு சங்கிலி வடம் பூட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.