உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

சேலம்: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க, சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்-பிரகாஷ் தலைமை வகித்தார்.அதில் ஆத்துாரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டத்தை உருவாக்குதல்; சேலம் கோட்டத்தை பிரித்து, வாழப்பாடி வட்-டத்தை தலைமையிடமாக வைத்து புது கோட்டம், ஆத்துார் கோட்டத்தை பிரித்து தலைவாசல் வட்டத்தை தலைமையிடமாக வைத்து புது வருவாய் கோட்டம் உருவாக்குதல்; மக்கள் தொகைக்கு ஏற்ப சேலம் வருவாய் அலகில் வட்டம், குறு-வட்டம், கிராமங்களை பிரித்தல்; பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் அகிலன், துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ