உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 கி.மீ., சாலை முறையாக பராமரிக்க கோரிக்கை

3 கி.மீ., சாலை முறையாக பராமரிக்க கோரிக்கை

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி - வீரபாண்டி ஒன்றிய எல்லைக்குட்பட்ட ஆலங்காட்டானுார் முதல் செம்பாய்வளவு வரை, 3 கி.மீ., சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சீரழிந்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைவது வாடிக்கையாகிவிட்டது. முக்கியமாக காலை, மாலையில் செல்லும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் ஊர்ந்தபடி செல்லும் அவலம் உள்ளது. இச்சாலையை சீரமைக்கக்கோரி, பி.டி.ஓ., அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனி பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., சந்திரமலரிடம் கேட்டபோது, ''விரைவில், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை