உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை

கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை

பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி, பனமரத்துப்பட்டி பிரிவு பகுதியில் வீடுகள், காபி பார், ஓட்டல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியே செல்கிறது. ஆனால் ஆதிபராசக்தி கோவில் முதல், ஆஞ்சநேயர் கோவில் வரை கால்வாய் சேதமடைந்துள்ளது. பிளாஸ்டிக், குப்பை அடைத்துக்கிடக்கிறது. கழிவுநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாயை சீரமைத்து கழிவுநீரை வெளியேற்ற, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை