உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியருக்கு புதிய மருத்துவ காப்பீடுஅடையாள அட்டை வழங்க கோரிக்கை

ஆசிரியருக்கு புதிய மருத்துவ காப்பீடுஅடையாள அட்டை வழங்க கோரிக்கை

ராசிபுரம்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் கருவூல அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் கதிர்வேல் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், கதிரேசன், கண்ணன் ஆகியோர் வாழ்த்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், சிதம்பரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு, ஓய்வு பெறுவதற்கு முன் கடைசியாக பெற்ற ஊதியமே மறு நியமன காலத்திற்கு ஊதியமாக வழங்க வேண்டும். மாத ஊதியத்தில், 20 சதவீதம் ஊதிய வெட்டி, ஊதிய இழப்பு ஏற்படுத்தி, பணி நிறைவு ஆசிரியர்களிடம் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தாதொகை பிடித்தம் செய்யப்படுவதை கைவிட வேண்டும். வருங்கால வைப்பு நிதி, கடன் கணக்கு ஆணைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை