தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, 2002 பிப்., 24ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவில் முழுதும் வர்ணப்பூச்சுகள் சிதைந்துந்துள்ளன.கோவில் முன் இருந்த, நான்கு கால் மண்டபம், லாரி மோதியதில் சரிந்து போனது. இதனால் தொழிலதிபர், பக்தர்கள் முன் வந்து, 2 கோடி ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல், தரைத்தளம், 4 கால் மண்டபம், தங்கத்தேர் கொட்டகை உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பணி முடிந்ததும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து செயல் அலுவலர் கஸ்துாரி கூறுகையில், ''6 மாதங்களில் சீரமைப்பு பணி முடிந்துவிடும். அதற்கு பின் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.