உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுப்பட்டா பதிவேற்றம் செய்வதில் சிக்கல் முகாம் நடத்தி தனி பட்டா வழங்க கோரிக்கை

கூட்டுப்பட்டா பதிவேற்றம் செய்வதில் சிக்கல் முகாம் நடத்தி தனி பட்டா வழங்க கோரிக்கை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் திட்-டங்கள், மானியங்கள் எளிதில் கிடைக்க, பயிர் சாகுபடி நில ஆவ-ணங்கள், வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் வேளாண் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த வேளாண் தரவுதளத்தில், நில ஆவணங்கள் பதிவு செய்த பின், ஆதார் எண் போன்று, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம் அரசின் திட்டங்கள், மானி-யங்கள் வழங்கப்பட உள்ளன.இதுகுறித்து பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவ-லர்கள் கூறியதாவது:விடுமுறை நாட்களிலும், விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று, சாகுபடி நில பட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் ஆகியவை பதிவேற்றம் செய்கிறோம். ஆனால், 50 சதவீதத்துக்கு மேல் கூட்டு பட்டாவாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயர், ஒரே பட்டாவில் உள்ளன. அதில் யாருக்கு எவ்வளவு நிலம் என தெரியவில்லை. யார் பெயரில் எவ்வளவு நிலம் என தெரிந்தால், அதற்கேற்ப மானியம், திட்டங்கள் கிடைக்கும். அனைவர் பெயரின் ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் கூட்டுப்பட்டா வலை தளத்தில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் உள்ளது. அதனால் முதல்கட்டமாக தனிப்பட்டா மட்டும் பதிவேற்றம் செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.கூட்டு பட்டா வைத்துள்ள விவசாயிகள் கூறுகையில், 'தாத்தா, தந்தை காலத்தில் இருந்தே சொத்து பாகப்பிரிவினை செய்யாமல் உள்ளதால் கூட்டுப்பட்டாவாக உள்ளது. தனி பட்டா வாங்க நிறைய செலவு செய்ய வேண்டும். அதற்கு விவசாயத்தில் வரு-மானம் இல்லை. உள்ளூரில் முகாம் நடத்தி, எளிதில் தனி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை