பணம் பறித்த 3 பேருக்கு காப்பு
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், பாத்திமா நகரை சேர்ந்தவர் கவுதம், 28. இவர் நேற்று, காளிகவுண்டர் காடு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 3 பேர் வழிமறித்து 5,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து கவுதம் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தளபதி, 23, சந்துரு, 24, கதிரவன், 22, ஆகியோரை கைது செய்தனர்.