மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்தவர்
06-Sep-2024
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் மணி, 32. பெயின்-டரான இவர் நேற்று, அதே பகுதியில் உள்ள வையாபுரி என்பவ-ரது விவசாய கிணற்றின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்தார். 120 அடி ஆழம், 30 அடி தண்ணீர் கொண்ட கிணற்றில் விழுந்தது குறித்து, மதியம், 1:00 மணிக்கு கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலை-மையில் வீரர்கள், வலை மூலம் மணியை, ஒரு மணி நேரத்துக்கு பின் சிறு காயத்துடன் மீட்டனர். பின் மணியை, தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். கெங்கல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Sep-2024