| ADDED : நவ 24, 2025 04:28 AM
அயோத்தியாப்பட்டணம்,:அயோத்தியாப்பட்டணத்தில், ராமதாஸ் ஆதரவாளர், பா.ம.க.,சேலம் வடக்கு மாவட்ட செயலர் செல்வம் தலைமையில், மாவட்ட செயற்குழு கூட்டம்நடந்தது. ஏற்காடு மற்றும் வீரபாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியில் மாநில இணை பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் பேசியதாவது: சேலம் கலெக்டர் அலுவலகம் முன், வரும் டிச., 12ல், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில், 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து, துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாநில வன்னியர் சங்க செயலர் தங்க அய்யாசாமி, மாவட்டத் தலைவர் லட்சுமணன், பேரூர் செயலாளர் மணி, பேரூர் தலைவர் ஆனந்த், ஒன்றிய செயலர்கள் மாது, பச்சமுத்து, குமரவேல், சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.