உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டி சடலத்தை எடுத்துச்செல்ல தனிநபர் எதிர்ப்பால் சாலை மறியல்

மூதாட்டி சடலத்தை எடுத்துச்செல்ல தனிநபர் எதிர்ப்பால் சாலை மறியல்

இடைப்பாடி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே முரம்புக்காட்டில் வசிக்கும் பட்டியலின மக்களில் யாரேனும் இறந்தால், அருகே உள்ள இடுகாட்டுக்கு, ராஜாமணி என்பவருக்கு சொந்தமான நிலம் வழியே கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த சரசு, 70, என்பவர் இறந்தார். அவரது உடலை, ராஜாமணி நிலத்தின் வழியே கொண்டு செல்ல, அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நேற்று, சரசு உடலை வைத்துவிட்டு, அருகே உள்ள கொங்கணாபுரம் - ஓமலுார் சாலையில், மதியம், 3:00 மணிக்கு, இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, 3 மாதங்களில் வழி ஏற்படுத்தி தருவதாகவும், தற்போது அந்த வழியிலேயே செல்லலாம் என கூறினர். இதனால் மறியலை கைவிட்டு, வழக்கமான வழியில் உடலை கொண்டு சென்று புதைத்தனர். இச்சம்பவத்தால், கொங்கணாபுரம் - ஓமலுார் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ