உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா

சாலை பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா

சேலம், தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில், சேலம், ஜங்ஷன் அருகே புதுரோட்டில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நேற்று, மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தினர். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அதில் சாலை பணியாளர்களின், 41 மாத பணிக்காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். அதுதொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த, மேல் முறையீடு மனுவை வாபஸ் பெற தமிழக அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாநில பொதுச் செயலர் விஜயகுமார், கோட்ட செயலர்கள் செந்தில்குமார், ஸ்ரீதர், கோட்ட தலைவர் அரிமயில் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி