உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சேலம், சாலையோர விற்பனையாளர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதான பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் இளங்கோ தலைமை வகித்தார். அதில் மாநகராட்சியில் முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனை குழுவை ரத்து செய்து, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம், ஒழுங்குபடுத்தல் சட்டப்படி வியாபாரிகளை பாதுகாத்தல்; சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து விற்பனையாளர் அடையாள அட்டை வழங்குதல்; பிரதமர் சேவா நிதி மூலம் அடையாள அட்டை உள்ள உண்மையான விற்பனையாளர்களுக்கு முறையாக கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !