நகை கடையில் கொள்ளை முயற்சி
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், ராம் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 48. அயோத்தியாப்-பட்டணம் பஸ் ஸ்டாப் அருகே, ஆத்துார் நெடுஞ்சாலையோரம் நகைக்கடை வைத்-துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை, அப்பகுதியினர் பார்த்து, ஜனார்த்தனனிடம் தொடர்புகொண்டு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்து வந்து பார்த்த-போது, வெளி கதவின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சியில் ஈடு-பட்டது தெரிந்தது. அவர் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்க-னவே, 8 மாதங்களுக்கு முன், ஜனார்த்தனன் வீட்டில், 52 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு, போலீசார் விசாரித்து வரும் நிலையில், தற்போது அவரது கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.