உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாறை வெட்டி எடுப்பு வாகனங்கள் பறிமுதல்

பாறை வெட்டி எடுப்பு வாகனங்கள் பறிமுதல்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி மலைக்கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மலைக்குன்று பாறைகளை வெட்டி கடத்தி வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி தலைமையில் அதிகாரிகள், அங்கு சென்றபோது, பாறையை உடைத்துக்கொண்டிருந்த ஆட்கள்ஓட்டம் பிடித்தனர். அங்கு பாறைகளை வெட்டி எடுக்க பயன்படுத்திய இரு ஹிட்டாச்சி, ஒரு பொக்லைன், பாறையை துளையிடும் இரு ஏர் கம்ப்ரசர் டிராக்டர்கள், ஜெனரேட்டர், கட்டிங் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கனிம வளத்துறை அதிகாரிகள் புகார்படி, பாறைகளை உடைத்தவர்கள் குறித்து, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை