உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

வாழப்பாடி: ஆத்துாரை சேர்ந்த சங்கர் மகன் நவீன்குமார், 25. டி.எம்.இ., முடித்த இவர், தண்ணீர் கேன் போடும் வேலை செய்கிறார். நரசிங்கபுரத்தை சேர்ந்த, பெரியண்ணன் மகள் ராமஸ்ரீ, 20. பி.சி.ஏ., படித்துள்ளார். இருவரும் காதலித்தனர். இது பெண் வீட்டினருக்கு தெரியவர, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டினரை அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ