உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

தலைவாசல்: தலைவாசல் அருகே வேப்பம்பூண்டியை சேர்ந்த பூமாலை மகன் சின்னதுரை, 21. கார் டிரைவர். கடலுார் மாவட்டம் திட்டக்குடி, வள்ளிமதுரத்தை சேர்ந்த, சீனிவாசன் மகள் திரிஷா, 21. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும், சின்னதுரையும், 6 ஆண்டுகளாக காதலித்தனர். இதையறிந்த திரிஷாவின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதனால், 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, இருவரும், கள்ளக்குறிச்சியில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, வீரகனுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். திரிஷாவின் பெற்றோர் ஏற்கவில்லை. சின்னதுரையுடன், திரிஷாவை, போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ