உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏ.டி.எம்.,ல் ரூ.1.18 லட்சம் நுாதன முறையில் திருட்டு

ஏ.டி.எம்.,ல் ரூ.1.18 லட்சம் நுாதன முறையில் திருட்டு

சேலம், சேலம், கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லதுரை மனைவி ஜெயலட்சுமி, 60. இவர் கடந்த, 2ல் அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மிஷினில் தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, 2,000 ரூபாய் எடுத்துள்ளார்.அப்போது, அவருக்கு பின்னால் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர், ஜெயலட்சுமியின் ஏ.டி.எம்., கார்டின் ரகசிய நம்பரை நோட்டமிட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த கார்டை, மிஷினில் வைத்து விட்டு ஜெயலட்சுமியின் கார்டை நுாதன முறையில் மாற்றி விட்டார்.இதனிடையே கடந்த, 4ல் ஜெயலட்சுமியின் மொபைல்போனுக்கு, 7 தவணகைளாக, 1.18 லட்சம் ரூபாய் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வங்கியில் கேட்ட போது, தன்னை ஏமாற்றி பின்னால் இருந்த மர்ம நபர் கார்டை மாற்றியது தெரியவந்தது.இது குறித்து ஜெயலட்சுமி, நேற்று முன்தினம் அழகாபுரம் போலீசில் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம்., மையத்தில் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை