89 ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் ரூ.1.59 லட்சம் அபராதம் வசூல்
சேலம், ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரால், மேட்டுப்பட்டி, தொப்பூர் இரு சுங்கச்சாவடிகளில் கடந்த 30 முதல், நேற்று வரை வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினர், சோதனையில் ஈடுபட்டனர். அதில், 502 ஆம்னி பஸ்களை சோதனைக்கு உட்படுத்தியதில், 89ல், கூடுதல் கட்டணம் வசூலித்து முறைகேடு நடந்தது கண்டுபிடித்து, 1.59 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, 12.83 லட்ச ரூபாய் சாலை வரி வசூலானது. 7 நாள் நடந்த சோதனையில், அரசுக்கு, 14.84 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.