மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது
02-Nov-2026
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் கேசவன், 34. ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் ஆட்டோவில் காந்திநகர் மயானம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, 2 பேர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, கேசவன் சட்டை பாக்கெட்டில் இருந்த, 2,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். கேசவன் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது, கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த ரவுடி சுரேஷ், 41, பாலமுருகன், 37, என தெரிந்தது. சுரேைஷ கைது செய்த போலீசார், பாலமுருகனை தேடுகின்றனர்.
02-Nov-2026