உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் கவரிலிருந்த ரூ.50,000 மாயம்

பைக் கவரிலிருந்த ரூ.50,000 மாயம்

பைக் கவரிலிருந்து 50000 ஆயிரம் மாயம்ஓமலுார், டிச. 12--ஓமலுார், தாத்தியம்பட்டியை சேர்ந்தவர் தங்கதுரை, 34. கொத்து வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் தாயுடன், ஓமலுார் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கியில், 2 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு, நேரமானதால் பணம் வாங்காமல் சென்றார். நேற்று காலை, 50,000 ரூபாயை பெற்ற அவர், ேஹாண்டா பைக் கவரில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அங்கு சென்று பைக் கவரை திறந்தபோது பணம் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர், ஓமலுார் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ