உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 16 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

16 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்

சேலம், :தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார்.மாநில ஒருங்கிணைப்பாளர் ராதா பேசியதாவது: துாய்மை காவலர்களுக்கு மாதம், 10,000 ரூபாய் சம்பளம் வழங்குதல்; டேங்க் ஆப்பரேட்டர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக வைத்து, மாதம், 15,000 ரூபாய் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்தல் உள்பட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணி, ரவி, பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி