சேலம் - அரக்கோணம் ரயில் மீண்டும் இயக்கம்
சேலம் :அரக்கோணம் - சேலம் பயணியர் ரயில், சனி, ஞாயிறு தவிர்த்து, மற்ற நாட்களில் அதிகாலை, 5:15க்கு புறப்பட்டு, காலை, 10:50க்கு சேலம் வந்து சேர்ந்தது. மறுமார்க்க ரயில் மதியம், 3:30க்கு சேலத்தில் கிளம்பி இரவு, 8:45க்கு அரக்கோணத்தை அடைந்தது. இந்த ரயில், சில வாரங்களாக தற்காலிக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல், இரு மார்க்கத்திலும் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.இயக்கத்தில் மாற்றம்ஈரோடு அருகே விஜயமங்கலம் ஸ்டேஷன் அருகே பராமரிப்பு பணியால், இன்று, வரும், 28 மதியம், 1:00 மணிக்கு கிளம்பும் திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ், விஜயமங்கலம் வரை மட்டும் இயக்கப்படும். பணி முடிந்த பின், முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக, விஜயமங்கலம் முதல் பாலக்காடு வரை இயக்கப்படும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.