உங்களுடன் ஸ்டாலின் முகாம் சேலம் கலெக்டர் ஆய்வு
அயோத்தியாப்பட்டணம், டி.பெருமாபாளையம், தாசநாயக்கன்பட்டி, கோரத்துப்பட்டி, வளையக்காரனுார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு, வீராணத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. முகாமை, கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். அப்போது மக்கள், 'வருவாய்த்துறையினர் பட்டா பெயர் மாற்றம், தனி பட்டாவுக்கு காலதாமதம் செய்வதால், விரைவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் பிருந்தாதேவியிடம் கோரிக்கை வைத்தனர். இதில், தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய பொருளாளர் பழனிவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.