சேலம் அரசு பொருட்காட்சி துவக்கம்
சேலம், சேலம் புது பஸ் ஸ்டாண்டு அருகில் ஆடி திருவிழாவையொட்டி, அரசு பொருட்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்றுதிறந்து வைத்து, அரசுத்துறை அரங்குகளை பார்வையிட்டனர்.அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், '' சேலத்தில், 41வது பொருட்காட்சி துவங்கியுள்ளது. அர சுதுறை சார்ந்த நலத்திட்டங்கள், எவ்வாறு விண்ணப்பிப்பது, பயனாளிகள் தேர்வு போன்ற பல்வேறு சந்தேகங்களை, பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள உதவி செய்கிறது. 26 அரசுத்துறை, 6 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம், 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 45 நாட்கள் நடக்கும் பொருட்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. பெரியவர்களுக்கு 15 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய், மாணவர்களுக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு பேசினார்.தொடந்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில், 200 பயனாளிகளுக்கு, 198 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். கலெக்டர் பிருந்தா தேவி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.