உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பத்திரிகையாளர் மீதானதாக்குதலுக்கு கண்டனம்

பத்திரிகையாளர் மீதானதாக்குதலுக்கு கண்டனம்

சேலம்: சேலம், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு, சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து மன்றத்தின் தலைவர் கதிரவன், செயலாளர் தங்கராஜா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் செய்யும் தவறுகளை, துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டி உணரவைப்பதே நான்காவது தூணாக பத்திரிகையின் கடமை. இதனடிப்படையில் நேற்று, சேலம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆஜர்படுத்த வரும்போது, அந்த செய்தியை சேகரித்து மக்களுக்கு கொண்டுசெல்லும் கடமை செய்ய, அங்கே குவிந்திருந்த பத்திரிகையாளர்களை சில சமூக விரோதிகள் தடுத்து தாக்கினர்.நீதியை நிலநாட்டக்கூடிய நீதிமன்றத்தில், சட்டத்தை காக்கவேண்டிய வக்கீல்கள் சிலரும் இணைந்து தாக்குதல் நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் இதுபோன்ற செயல்களை, சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை