உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவனை கடத்திய 4 பேர் சுற்றி வளைப்பு

மாணவனை கடத்திய 4 பேர் சுற்றி வளைப்பு

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் பள்ளி மாணவன் கடத்தப்பட்டது தொடர்பாக, கரூரை சேர்ந்த நால்வரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அடுத்த நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் விக்ரமன் (14), கடந்த 18ம் தேதி கடத்தி செல்லப்பட்டார். இது தொடர்பாக, மாணவனின் தாய் ஆண்டன்ரஜினா கொடுத்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவனை விடுவிக்க, 2 லட்சம் ரூபாய் கேட்டு, விக்ரமனின் அண்ணன் ஸ்டீபன் மொபைல் ஃபோனுக்கு தொடர்பு கொண்டு, ராஜன் என்பவர் பேசியுள்ளார். இதற்கு, ஸ்டீபன் ஒப்புகொண்டதையடுத்து, பணத்தை பெறுவதற்காக ராஜன் உள்பட, 4 பேர் கும்பல் நேற்று நாகியம்பட்டி முகாமுக்கு வந்துள்ளனர். முகாம் வாசிகள் நால்வர் கும்பலை மடக்கி பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், 4 பேரும் கரூர் ராயனார் முகாமை சேர்ந்த ராஜன் (30), விக்னேஸ்வரன் (36), அசோக்குமார் (28), ஜெயராஜ் (31) என தெரியவந்தது. அவர்களிடம், தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை