உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தற்கொலை மிரட்டல்விடுத்தவருக்கு அறிவுரை

தற்கொலை மிரட்டல்விடுத்தவருக்கு அறிவுரை

பனமரத்துப்பட்டி: கட்சியில் சீட் கிடைக்காததால், தீ குளிப்பதாக மிரட்டல் விடுத்த, அ.தி.மு.க., கவுன்சிலரை போலீஸார் சமாதனம் செய்தனர்.பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 10வது அ.தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் முத்துசாமி. இவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சி தலைமை சீட் வழங்காததால், எம்.ஜி.ஆர்., சிலை முன் தீ குளிப்பேன் என, மிரட்டல் விடுத்தார்.சேலம் ரூரல் டி.எஸ்.பி., தமிழ்செல்வன், கவுன்சிலர் முத்துசாமியிடம் விசாரணை செய்தார். முறைப்படி கட்சி தலைமையை அணுகி, கோரிக்கையை தெரிவிக்கலாம். அதை விடுத்து தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட கூடாது என, போலீஸார் அறிவுறுத்தினர். இதனால், சமாதனம் அடைந்த முத்துசாமி, கட்சி தலைமைக்கு கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி