உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்ட தேர்தலுக்கு1,970 மின்னணு இயந்திரம்

சேலம் மாவட்ட தேர்தலுக்கு1,970 மின்னணு இயந்திரம்

சேலம்: உள்ளாட்சி தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பயன்படுத்த, 1,970 மின்னணு ஓட்டு இயந்திரங்கள், இந்திய தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நடக்க உள்ள தேர்தலில், மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் மேயர், 60 கவுன்சிலர்களுக்கு ஓட்டளிக்க, 626 சாவடிகளும், நான்கு நகராட்சியில், 111 பதவிகளுக்கு, 171 சாவடிகளும், பேரூராட்சியில், 540 ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டுக்கு, மின்னணு ஓட்டு இயந்திரங்களை வழங்குமாறு, மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்திய தேர்தல் ஆணையம், 1,970 ஓட்டு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று, அரசியல் கட்சியினர் முன்னிலையில், இயந்திரங்கள் உள்ள பெட்டிகள் திறக்கப்பட்டு, சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை அழிக்கும் பணி நடந்தது. மாநகராட்சிக்கு, 1,200 இயந்திரங்களும், நகராட்சிக்கு, 340 இயந்திரங்களும், பேரூராட்சிக்கு, 1,000 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. மாநில தேர்தல் ஆணையம், கூடுதலாக இயந்திரங்களை கேட்டால், இந்திய தேர்தல் ஆணையம் வழங்குவதற்கு உத்தரவிடும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி