உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நஷ்ட ஈடு வழங்காததால்அரசு விரைவு பஸ் "ஜப்தி

நஷ்ட ஈடு வழங்காததால்அரசு விரைவு பஸ் "ஜப்தி

சேலம்: சேலத்தில், பஸ்- லாரி மோதிய விபத்தில், கால் முறிவு ஏற்பட்ட பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இழுத்தடித்து வந்த, அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ், ஜப்தி செய்யப்பட்டது.சேலம், காமராஜர் நகரை சேர்ந்தவர் லஷ்மி. இவர் கடந்த, 2005ம் ஆண்டு, பிப்ரவரி, 13ம் தேதி சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில், பயணம் செய்த போது, பஸ் அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.பஸ்சில் பயணம் செய்த லஷ்மிக்கு இடது கால் முறிந்தது. லஷ்மி, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வக்கீல் கலையரசி மூலம், 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், வட்டியுடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய் வழங்க, 2008ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் உத்தரவிடப்பட்டது.பல முறை நீதிமன்ற உத்தரவை காட்டியும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காததால், கூடுதல் சார்பு நீதி மன்றத்தில், லஷ்மி மனு தாக்கல் செய்தார். மனுவை கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி கலையரசி விசாரணை செய்து, 23ம் தேதிக்குள் நஷ்டஈடு தொகை வழங்காவிட்டால், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்து, நஷ்டஈடு தொகையை வசூலிக்க உத்தரவிட்டார்.லஷ்மி மற்றும் அவரது வக்கீல் கலையரசி, மாவட்ட நீதிமன்ற அமீனா இளங்கேஸ்வரன் ஆகியோர் நீதி மன்ற, 'ஜப்தி' உத்தரவுடன், சேலம் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து கழக பஸ், 'டெப்போ'வுக்கு சென்றனர். அங்கு சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை, 'ஜப்தி' செய்து, சேலம் நீதி மன்றத்துக்கு கொண்டு வந்தனர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி