உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயரம் தாண்டுதலில் தங்கம் சேலம் மாணவி சாதனை

உயரம் தாண்டுதலில் தங்கம் சேலம் மாணவி சாதனை

சேலம், தேசிய அளவிலான உயரம் தாண்டுதலில், சேலம் மாணவி கோபிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.சென்னையில், தேசிய அளவில் நடந்த தடகள விளையாட்டு போட்டியில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, சேலம் விளையாட்டு விடுதி மாணவி கோபிகா, 22, உயரம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.இது குறித்து பயிற்சியாளர் இளம்பரிதி கூறுகையில்,'' சேலம் ஏ.வி.எஸ்., கல்லுாரியில் எம்.பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கோபிகா, கடந்த மாதம் சேலம் பெரியார் பல்கலையில் நடந்த, மாநில அளவிலான போட்டியில், 1.82 மீட்டர் உயரம் தாண்டி மாநில அளவில் புதிய சாதனை படைத்து, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி