உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உதவித்தொகை தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம்: தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தேசிய வருவாய் வழி, திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, 9 முதல் பிளஸ் 2 படிக்கும் வரை, மாதம், 1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு, பிப்., 22ல் இத்தேர்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, ஆன்லைனில், ஜன., 25க்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. தற்போது மாணவர்கள் நலன் கருதி, வரும், 29 மாலை, 6:00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ