சமைத்தபோது தீப்பற்றி பள்ளி மாணவி படுகாயம்
சேலம், சேலம், அமானி கொண்டலாம்பட்டி, தானாக்கரட்டை சேர்ந்த, ராமசந்திரன் மகள் தேசிகா, 15. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது ஆடையில் தீப்பற்றியது. சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், தீயை அணைத்து மீட்டனர்.தொடர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.