உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு ஆத்துாரில் காட்சிகள் ரத்து

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு ஆத்துாரில் காட்சிகள் ரத்து

ஆத்துார், கவுதம் தின்னனுாரி இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, பிற மொழிகளில், 'டப்பிங்' ஆகி, ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படம், 'கிங்டம்'. இந்த படத்தில், இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போன்று சித்தரிப்பதாகவும், அங்குள்ள மலையக தமிழர்களை, இலங்கை தமிழர்கள் ஒடுக்கினர் என்பது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்துார் என்.எஸ்., தியேட்டரில், அப்படம் திரையிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் நகர செயலர் சக்தி தலைமையில் கட்சியினர், மதியம், 1:00 மணிக்கு தியேட்டரை முற்றுகையிட்டனர். பின் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு மீண்டும் சென்று, படம் திரையிடக்கூடாது என, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்து மனு அளித்தனர். பின் மாலை, இரவு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததால், கட்சியினர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை