உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பழங்கால பொருட்கள் பாதுகாக்க கருத்தரங்கம்

பழங்கால பொருட்கள் பாதுகாக்க கருத்தரங்கம்

சேலம்: சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், வரலாற்றுத்துறை, அரசு அருங்காட்சியகம் இணைந்து, 'அரும்பொருட்கள் பாதுகாப்பு' தலைப்பில், சிறப்பு கருத்தரங்கை நேற்று நடத்தின. ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி, நாணயங்கள், ஓலைச்சுவடிகள், தோல் பாவை, கற்சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை கருஞ்சீரகம், வேப்ப இலைகள், சீதாப்பழ விதைகள், குறுமிளகு, கற்பூரம் உள்ளிட்டவையால், பூஞ்சை மற்றும் பூச்சிகளில் இருந்து காப்பாற்றும் விதம் குறித்து விளக்கினார். கல்லுாரி முதல்வர் ஜெயஸ்ரீ(பொ), துறைத்தலைவி கவிதா, திரளான மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !