மேலும் செய்திகள்
விரைவு ரயில் மோதி கல்லுாரி மாணவி பலி
26-Oct-2025
சேலம்: ர யிலில் இருந்து தவறி விழுந்த மஹாராஷ்டிரா மாநில வேளாண் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டம், மோர்சி, பசார்ஜோர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கஜ்பேஜ், 46; அமராவதி மாவட்ட வேளாண் அதிகாரி. இவரது மனைவி மேகா கஜ்பேஜ் மற்றும் உறவினர்கள் நான்கு பேருடன் கேரளாவுக்கு சுற்றுலா புறப்பட்டார். அக்., 31ல், நிஜாமுதீன் - திருவனந்தபுரம் சுவர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினர். சே லத்தை நோக்கி ரயில் நேற்று முன்தினம் மதியம் வந்தது. காகங்கரை - சாமல்பட்டி ஸ்டேஷன் இடையே வந்தபோது, கழிப்பறை சென்று திரும்பிய சந்தோஷ் கஜ்பேஜ், கதவருகே வந்த போது, தடுமாறி ரயிலுக்கு வெளியில் விழுந்தார். ரயில்வே போலீசார் தேடியபோது, தண்டவாளத்தின் அருகே தலையில் பலத்த காயமடைந்து சந்தோஷ் கஜ்பேஜ் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
26-Oct-2025