உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.50 லட்சத்தில் வாங்கிய செப்டிக் டேங்க் வாகனம் டிரைவர், பணியாளரின்றி காட்சிப்பொருளாக நிறுத்தம்

ரூ.50 லட்சத்தில் வாங்கிய செப்டிக் டேங்க் வாகனம் டிரைவர், பணியாளரின்றி காட்சிப்பொருளாக நிறுத்தம்

கெங்கவல்லிசேலம் மாவட்டம் தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 18 வார்டுகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய, திடக்கழிவு மேலாண் திட்டத்தில் கடந்த ஜனவரியில், நவீன செப்டிக் டேங்க் வாகனம் வழங்கப்பட்டது. ஆனால், 7 மாதங்களுக்கு மேலாகியும், அந்த வாகனத்தை பயன்படுத்தாமல், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் காட்சி பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதா கூறியதாவது: கழிப்பறையின் கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், டேங்க் வசதியுடன் கூடிய, 'ஈச்சர்' வாகனம் வழங்கப்பட்டது. ஆனால் டிரைவர் நியமிக்கப்படவில்லை. கனரக வாகனம் போன்று உள்ளதால், பயிற்சி பெற்ற டிரைவர் வேண்டும். மேலும் வாகனம் இயக்கும் பணியாளர்களும் இல்லை. இதனால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை