உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வி.ஏ.ஓ., ஆபீசில் கழிவுநீர் தடுக்க சாக்கடை பணி

வி.ஏ.ஓ., ஆபீசில் கழிவுநீர் தடுக்க சாக்கடை பணி

தாரமங்கலம், தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, வி.ஏ.ஓ., அலுவலகத்தை சுற்றியுள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அலுவலகம் அருகே உள்ள பட்டா நிலத்தில் சாக்கடையில் சென்றது.அங்கு தேவைக்கேற்ப அடைத்ததால் மழை காலங்களில் மழைநீர், சாக்கடையில் செல்ல வழியின்றி மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து, வி.ஏ.ஓ., அலுவலகம் முழுதும் தேங்கியது. இதனால் மாற்றுப்பாதையில் சாக்கடை அமைக்க நகராட்சி பொது நிதியில், 4 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நங்கவள்ளி சாலையில் உள்ள பேக்கரியில் இருந்து, 90 மீ.,க்கு பள்ளம் தோண்டி பெரிய சிமென்ட் பைப் பதிக்கும் பணி நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ