உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

இடைப்பாடி : பூலாம்பட்டி, குப்பனுார் சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பூலாம்பட்டி, குப்பனுாரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பெண்கள் உட்பட, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். பூலாம்பட்டி, குப்பனுார் பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக தாரை, பம்பைமேளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை