ஆடுகள் திருட்டு
சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, வெடிப்புபாறை ஊத்துக்காட்டை சேர்ந்தவர் மகாலட்சுமி, 33. இவரது ஆடுகளை, கடந்த, 28 இரவு வீடு அருகே கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை வெள்-ளாடு, செம்மறி ஆடு திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி அன்னதானப்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடி-வி'வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.