உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாயமான புது மணப்பெண் 2 தாலியுடன் வந்ததால் அதிர்ச்சி

மாயமான புது மணப்பெண் 2 தாலியுடன் வந்ததால் அதிர்ச்சி

சேலம், ஜன. 4-நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த, 27 வயது வாலிபருக்கும், சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த, 23 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணமானது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கருப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு வாலிபர், மனைவியுடன் வந்தார்.தொடர்ந்து சேலம் டவுனுக்கு தம்பதியர் வந்தனர். அங்கு புத்தாடை வாங்கி கொண்டு பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அப்போது கழிப்பறை செல்வதாக கூறிச்சென்ற மனைவி, நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த வாலிபர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அந்த பெண் வந்தார். போலீசார், அவரது கணவர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், பெண் கழுத்தில் இரு தாலிகள் இருந்த நிலையில், ஒரு தாலியை கழற்றி, போலீசாரிடம் கொடுத்தார். பின் மஞ்சள் கயிறு கட்டப்பட்ட மற்றொரு தாலி மட்டும் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, 'திருமணத்துக்கு முன்பே, சேலம், கோரிமேட்டை சேர்ந்த செந்தில் என்பவரை காதலித்து வந்தேன். தற்போது அவரை திருமணம் செய்துகொண்டேன். அவருடன் வாழவே விருப்பம்' என, அப்பெண் தெரிவித்தார்.இதனால் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபர், 'நிச்சயம் செய்யும்போதே சொல்லியிருக்கலாம். இப்போது அவமானப்படுத்திவிட்டனர்' என கூறி அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி