உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் அக்கா பலி தம்பி படுகாயம்

விபத்தில் அக்கா பலி தம்பி படுகாயம்

சேலம்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த கணபதி மகள் நிவேதா, 24. பி.எஸ்சி., பட்டதாரி. இவரது தம்பி சங்கர், 21. இவர் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறார். சமீபத்தில் விடுமுறைக்கு, வீட்டுக்கு வந்த சங்கர், மீண்டும் சென்னைக்கு ரயிலில் செல்ல, நேற்று மொபட்டில், சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டார். நிவேதா அமர்ந்திருந்தார். கந்தம்பட்டி ரவுண்டானாவில் வந்த-போது, அந்த வழியே வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் அக்கா, தம்பி துாக்கி வீசப்பட்டதில், லாரிக்கு அடியில் நிவேதா சிக்கிக்கொண்டார். இருவரும் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வழியில் நிவேதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ