சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை பிரிவு கோகுலம் ஸ்பெஷாலிட்டியில் நாளை திறப்பு
சேலம்: கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், சிறுதுளை இரு-தய அறுவை சிகிச்சை பிரிவு, நாளை திறக்கப்பட உள்ளது.இதற்கான தொடக்க விழா குறித்து, சேலம், ஸ்ரீகோகுலம் மருத்து-வமனை குழும மேலாண் இயக்குனர் அர்த்தனாரி கூறியதாவது:சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை பிரிவு, சேலம், கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா, டிச., 8(நாளை) காலை, 10:30 மணிக்கு, சேலம், ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள, சி.ஜே.பல்லாசியோ ஓட்டலில் நடக்க உள்ளது. தமிழக மருத்துவ கவுன்சில் உறுப்-பினர் முருகநாதன், இந்த நவீன சிகிச்சை பிரிவை தொடங்கி வைப்பார். ஜி.டி.பி., குழும தலைவர் முத்துராஜன் பங்கேற்பார்.சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை என்பது, நெஞ்சு பகுதியில் சிறு துவாரம் வழியே மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிரத்-யேக கருவிகளை பயன்படுத்தி, இருதய வியாதிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் நவீன முறை.இவ்வாறு அவர் கூறினார்.கோகுலம் மருத்துவமனையின் மருத்துவர்கள் செல்லம்மாள், விஜய் ஆனந்த், நாகூர்மீரான், பிரபாகர், ராஜேஷ், ஜெயதேவ், ஜோ மார்ஷல் லியோ, மிதுன்குமார், கார்த்திகேயன், மோகன், பிரகாஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.