உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளியில் பாம்புகள் உலா

அரசு பள்ளியில் பாம்புகள் உலா

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதன் வளாகத்தில் ஆங்காங்கே முட்புதர் மண்டியுள்ளதால், பாம்புகள் அதிகளவில், 'உலா' வருகின்றன. நேற்று மதியம், 2:45 மணிக்கு, மாணவர் கழிப்பறையில், ஒரு பாம்பு புகுந்தது. மாணவர்கள் பார்த்து, அல-றியடித்து ஓடினர். பின் ஒரு ஆசிரியர் உதவியுடன் பாம்பை அப்பு-றப்படுத்தினர். ஏற்கனவே கடந்த, 13ல், வகுப்பறையில் பாம்பு புகுந்து, 9ம் வகுப்பு மாணவியை தீண்டி, அவர் சிகிச்சையில் உள்ளார். மாணவியர் விடுதியிலும் பாம்பு புகுந்து அச்சுறுத்தியது. இதனால் மாணவ, மாணவியர், அச்சமடைந்துள்ளதால், புதரை அகற்றி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ