மண் கடத்தியவர் கைது டிப்பர் லாரி பறிமுதல்
தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுார் ஏரியில் மண் கடத்துவதாக கிடைத்த தகவலால், வீரகனுார் வி.ஏ.ஓ., தனபால் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பொன்னாளியம்மன் கோவில் வழிப்பாதையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்ததில், மண் கடத்தி வந்தது தெரிந்தது.இதனால் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த, லாரி டிரைவர் செல்லையா, 40, என தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.