உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோலார் விளக்கு பொறி மானியத்தில் பெறலாம்

சோலார் விளக்கு பொறி மானியத்தில் பெறலாம்

மேட்டூர், மேச்சேரி வட்டார வேளாண் தொழில்நுட்ப முகமை திட்டத்தில், விவசாயிகளுக்கு சூரிய விளக்கு பொறி குறித்து செயல் விளக்க கூட்டம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி(பொ) பேசுகையில், ''சோலார் விளக்கு பொறியின் விலை, 4,480 ரூபாய். விவசாயிகள், சொந்த பணத்தில் விளக்கு பொறி வாங்கிக்கொண்டு, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது உள்பட ஆவணங்களை சமர்ப்பித்த பின், வேளாண் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து, விவசாயிகள் வங்கி கணக்கில், 4,000 ரூபாய் செலுத்தப்படும்,'' என்றார்.வேளாண் தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், ''தாய் அந்துப்பூச்சிகள், தண்டு துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை பூச்சி உள்பட அனைத்து பறக்கும் பூச்சிகளையும் சோலார் விளக்கு கவரும். இதை பயன்படுத்துவதன் மூலம், ரசாயன பூச்சி கொல்லி செலவினம் குறையும்,'' என்றார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சக்திவேல், சஞ்சை பிரியன், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !