உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோலார் மின் உற்பத்தி விழிப்புணர்வு கருத்தரங்கம்

சோலார் மின் உற்பத்தி விழிப்புணர்வு கருத்தரங்கம்

வாழப்பாடி :சேலம் மின் பகிர்மான வட்டம், வாழப்பாடி கோட்டம் சார்பில், பழனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிரதமர் சூரிய வீடு என்ற திட்டத்தில், சோலார் மின் உற்பத்தி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி தலைமை வகித்தார். சோலார் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசு சார்பில் வழங்கப்படும் மானிய தொகை குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள், நுகர்வோர், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பொறியாளர்கள், பணியாளர்கள், சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை