உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உளவியல் சிக்கல்களுக்கு தமிழ் இலக்கியத்தில் தீர்வு

உளவியல் சிக்கல்களுக்கு தமிழ் இலக்கியத்தில் தீர்வு

ஓமலுார், சேலம் பெரியார் பல்கலையில், உளவியல் துறை சார்பில், தேசிய அளவில் இரு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணி தொடங்கிவைத்து பேசியதாவது:மனிதனின் உளவியல் சிக்கல்களுக்கு, மனித மனங்களை அகம், புறம் என பதிவு செய்த திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்களில் தீர்வுகள் உள்ளன. அன்றாட வாழ்வை புரட்டிப்போடும் செயற்கை நுண்ணறிவு, உருவாக்கும் நுண்ணறிவு போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்கள், மனநிலை பாதிப்புகள் போன்றவற்றுக்கும் தீர்வு காண வேண்டி உள்ளது. அவற்றையும், உளவியல் பேராசிரியர்கள், நிபுணர்கள், ஆய்வுக்களமாக பயன்படுத்தி, உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக சொல்லப்பட்டவற்றை வெளிக்கொணர்ந்து, மக்களுக்கு பயன்படும்படி முறையாக அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துறைத்தலைவர் வெங்கடாசலம், உளவியல் ஆராய்ச்சி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !