உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது: வாக்-காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், பெயரை சேர்க்க படிவம்-6, நீக்கம் செய்ய படிவம்-7, குடியிருப்பு மாற்றம், வாக்-காளர் பட்டியலில் உள்ள பதிவை திருத்தம் செய்தல், புகைப்ப-டத்துடன் கூடிய மாற்று வாக்காளர் அட்டை பெறுதல், மாற்றுத்தி-றனாளி என குறிப்பிட படிவம்-8 பயன்படுத்தலாம். இது தொடர்-பாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு முகாம் நடக்கிறது. தேவையான வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்-படுத்தி கொள்ள வேண்டும். மேலும், 11 சட்டசபை தொகுதி-களில் உள்ள, 1,269 ஓட்டுச்சாவடி மையங்களில் வரும், 16,17,23,24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. காலை, 9:00 மணிக்கு தொடங்கி, மாலை, 5:00 மணிவரை முகாம் நடக்கி-றது. V0ters eci.gov.inஎன்கிற இணைய தளம், 'V0ter helpline' என்கிற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பதிவை உறுதிப்படுத்த 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூல-மாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ